கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று “அல்லாஹ்” என்ற வார்த்தையை முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பயன்படுத்த தடை விதிப்பதில் அரசாங்கம் தவறு செய்ததாக தீர்ப்பளித்தது.
எனவே, நீதிமன்றம் மெலனாவ் இனத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்த உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நீடித்த இந்த சர்ச்சையில், ஜில் அயர்லாந்தின் சட்ட நடவடிக்கைக்கு நீதிபதி நோர் பீ அரிபின் அனுமதி அளித்தார்.
2008-இல் மே 11 அன்று, ‘கடவுளுடைய ராஜ்யத்தில் எப்படி வாழ்வது’, ‘கடவுளுடைய ராஜ்யத்தில் உண்மையான வாழ்க்கை’ மற்றும் ‘கடவுளுடைய ராஜ்யத்தில் உண்மையான வழிபாடு’ என்ற ஒரு குறுவட்டு, ஜில் அயர்லாந்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட குறுவட்டுகளைத் திருப்பித் தரவும், இழப்பீடு வழங்கவும் கோரி அப்பெண் 2008-இல் ஆகஸ்ட் 20 அன்று சட்ட நடவடிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்.
‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து ஜில் விண்ணப்பித்த சட்ட நடவடிக்கையை மீண்டும் செவிமடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.