Home Featured நாடு தர்மேந்திரன் வழக்கைப் பற்றி வெளியே பேச வேண்டாம் – இஎஐசி-க்கு காலிட் வலியுறுத்து!

தர்மேந்திரன் வழக்கைப் பற்றி வெளியே பேச வேண்டாம் – இஎஐசி-க்கு காலிட் வலியுறுத்து!

768
0
SHARE
Ad

dharmaகோலாலம்பூர் – தர்மேந்திரன் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் போது, அதைப் பற்றி வெளியே பேசக் கூடாது என அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்திற்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்த வழக்கில் பாரபட்சமாகத் தீர்ப்பு வர வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு காவல்துறை அதிகாரிகள், வரும் மே 25 முதல் 27 வரையில் தங்களது தரப்பு வாதங்களை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஆணையத்தின் தலைவர் யாக்கோப் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை அந்த நான்கு அதிகாரிகளையும் தற்காக்க முயற்சி செய்வதாகக் கூறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள காலிட், “அவர்களுக்கு எதிராக முழுமையான, நெருக்கமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட்டன” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடத்தை கொண்ட எந்த ஒரு அதிகாரியையும், காவல்துறை தற்காக்காது என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அமலாக்கத்துறை நேர்மை ஆணையத்தின் தலைவர் யாக்கோப் எம் சாம் வெளியிட்ட அறிக்கையில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன், அதிகாரிகளின் சித்திரவதையால் தான் இறந்துள்ளார் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.