ஜூலை 8- நயன்தாரா மற்றும் சமந்தாவின் கலவை தான் நஸ்ரியா நசிம் என இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள அழகி நஸ்ரியா நசிம்.
தற்போதைய நிலையில் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ், தனுசுடன் நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார்.
நய்யாண்டி படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு பாடல் காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் உள்ளதால், சுவிட்சர்லாந்து செல்ல சற்குணம் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர், நயன்தாரா மற்றும் சமந்தாவின் கலவை தான் நஸ்ரியா என்றும், பெரிய ஆளாக வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments