Home கலை உலகம் நடுரோட்டில் கார் ஓட்டுநருடன் தகராறு செய்த நடிகை நஸ்ரியா!

நடுரோட்டில் கார் ஓட்டுநருடன் தகராறு செய்த நடிகை நஸ்ரியா!

852
0
SHARE
Ad

hqdefaultதிருவனந்தபுரம், ஜூன் 5 – திருவனந்தபுரத்தில் நடிகை நஸ்ரியா கார் மீது பின்னால் வந்த கார் மோதியதால், ஆத்திரமடைந்த நஸ்ரியா, நடுரோட்டில் கார்  ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகை நஸ்ரியா. தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.  கடந்த வருடம் நஸ்ரியாவுக்கும், பிரபல நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம் நடந்தது.

தற்போது பஹத்பாசிலுடன் ஆலப்புழாவில் உள்ள வீட்டில்  தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நஸ்ரியா திருவனந்தபுரம் வந்தார். பாலராமபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காரில்  தனது வீட்டிற்கு திரும்பினார்.

#TamilSchoolmychoice

Nazriya-Nazimதிருவனந்தபுரம் தம்பானூர் அருகே சென்றபோது, பின்னர் வந்த கார் நஸ்ரியாவின் கார் மீது மோதியது. இதனால் கோபமடைந்தவர் காரில் இருந்து  இறங்கி, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனருடன், நடுரோட்டில் தகராறு செய்தார்.

ஏதோ சினிமா படப்பிடிப்பு நடப்பதாக பொதுமக்கள்  கருதினர். நீண்ட நேரத்துக்கு பிறகுதான் கார் மோதியதால் ஏற்பட்ட பிரச்சனை என்பது தெரியவந்தது. பின்பு, கார் ஓட்டுனருடன் சமரசம் ஏற்பட்டு வீடு திரும்பியுள்ளார் நஸ்ரியா.