இதற்கான திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்குத் தரும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் இரு வீட்டினரும்.
மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ள நஸ்ரியா, தமிழில் நேரம், நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
ஆகஸ்ட் 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காலகுட்டம் என்ற இடத்தில் உள்ள அல்சாஜ் கன்வென்ஷன் என்ற திருமணமண்டபத்தில் இந்தத் திருமணம் நடைபெறுகிறது.
கடைசி படம் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று முடிவில் உள்ள நஸ்ரியா, தான் ஒப்புக் கொண்ட அனைத்துப் படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். கடைசியாக தன் (வருங்கால) கணவருடன் எல் ஃபார் லவ் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் நஸ்ரியா.