இரசிகர்களும் இதையெல்லாம் ரசித்து ரசித்துப் படிப்பார்கள்.
குறுகிய காலத்தில் இரசிகர்களைக் கவர்ந்து விட்ட நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் தேனிலவுக்கு கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்களாம். நடிகை நஸ்ரியா நடிக்க வந்த சிறிது காலத்திலேயே பிரபலமானார். பின் அதே வேகத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் நஸ்ரியாவுக்கும், பிரபல இயக்குனர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது.
பகத் மலையாளப் படமான ‘மணி ரத்னத்தில்’ நடித்து வருவதால் திருமணம் முடிந்த கையோடு அவரால் மனைவியை அழைத்துக் கொண்டு தேனிலவுக்கு செல்ல முடியவில்லை.
திருமணம் முடிந்த பிறகு பகத் ‘மணி ரத்னம்’ படத்தில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அந்த படம் முடிய இருப்பதால், புதுமணத் தம்பதி அடுத்த மாதம் தேனிலவுக்கு கிரீஸ் நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
நஸ்ரியா, பகத் ஒரு மாத காலம் தேனிலவு கொண்டாடுகிறார்களாம். அதன் பிறகு நாடு திரும்பும் அவர்கள் மலையாள படம் ஒன்றில் ஜோடியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.