Home கலை உலகம் அடுத்த மாதம் நஸ்ரியா-பஹத் பாசில் நிச்சியதார்த்தம்

அடுத்த மாதம் நஸ்ரியா-பஹத் பாசில் நிச்சியதார்த்தம்

706
0
SHARE
Ad

nasriya300-200

சென்னை, ஜன 30- நேரம், நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் பற்றி நஸ்ரியா கூறும்போது, ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை திருமணத்துக்கு முன்பாக முடிக்க உள்ளேன். திருமணத்துக்கு பிறகு நான் நடிப்பதில் பஹத்துக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முழு கவனத்தையும் குடும்பத்தில் செலுத்தவே முடிவு செய்துள்ளேன் என்றார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதுகுறித்து நஸ்ரியா தந்தை கூறும்போது,பிப்ரவரியில் நஸ்ரியா-பஹத் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க குடும்ப விழாவாக நடத்த உள்ளோம். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். மற்ற விவரங்கள் சில நாட்களில் தெரிவிக்கிறேன். ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்றார்.