புதுடெல்லி, செப்டம்பர் 20 – இந்தியா வந்துள்ள உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு உதவுமாறு, பில்கேட்சிடம் அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட பில்கேட்ஸ், 4.2 கோடி ரூபாயை காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தார்.
இதற்கு முன் பில்கேட்ஸும் அவரது மனைவியும் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ்,
“பிரதமர் மோடி அறிவித்துள்ள “சுத்தமான இந்தியா” (கிளீன் இந்தியா) திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே கழிவறை கட்டும் திட்டம் என்றும் தெரிவித்தார்.