Home உலகம் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு

பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு

739
0
SHARE
Ad

வாஷிங்டன்: பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

“நாங்கள் இணையாக ஒன்றாக இனியும் தொடர முடியும் என்று கருதவில்லை” என்று அவர்கள் தெரிவிதுள்ளனர்.

“நீண்ட ஆலோசனைகள் மற்றும் நிறைய வேலைகளுக்குப் பிறகு, எங்கள் திருமணத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்,” என்று இவர்கள் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

1980- களில் மெலிண்டா பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தபோது அவர்கள் முதன் முதலில் சந்தித்தனர்.

கோடீஸ்வர தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர்கள் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை கூட்டாக நடத்தி வருகின்றனர்.

தொற்று நோய்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக இந்த அமைப்பு பில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது.