Home நாடு கொவிட்-19: சிகிச்சை முறை முன்பு போல் அனைவருக்கும் பயனளிக்கவில்லை!

கொவிட்-19: சிகிச்சை முறை முன்பு போல் அனைவருக்கும் பயனளிக்கவில்லை!

430
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அமைச்சகம் அதன் நோயாளிகளில் அதிகமானோர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வருவதைக் கண்டறிந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறுகையில், இதுபோன்ற நோயாளிகள் முந்தைய தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது, அதே சிகிச்சை முறைக்கு குணமடைவது கடினமாவதாக கூறினார்.

கொவிட் -19 நோயாளிகளில் 6.7 விழுக்காடு பேர் மட்டுமே 2021 ஜனவரியில் 4 அல்லது 5 வகைகளில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

வகை 4 நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பிராணவாயு அளவு குறைவாக இருப்பதால் உயிர்வாழ்வதற்கு உதவி தேவைப்படுபவர்கள். வகை 5 நோயாளிகள், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பல உறுப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்.

அத்தகைய நோயாளிகளின் விகிதம் பிப்ரவரியில் 26.2 விழுக்காடாக அதிகரித்து, மார்ச் மாதத்தில் 17.2 விழுக்காடாக குறைந்து, பின்னர் ஏப்ரல் மாதத்தில் 35.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று அடாம் கூறினார்.

“மருத்துவ அவதானிப்புகள் நோயாளியின் சுயவிவரத்தின் அடிப்படையில் ஒரு மாற்றத்தைக் கண்டறிந்தன. 60 வயதிற்குட்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான அறிகுறிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன, ஆனால் இன்று தொற்றுநோய்களின் ஆரம்பக்கட்டத்தோடு ஒப்பிடும்போது மிகவும் தீவிரமான அறிகுறிகளைக் காட்டுகின்றன,” என்று அவர் கூறினார்.