Home நாடு காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூத்த காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையை முன்னாள் தேசிய காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வெளிப்படுத்தி உள்ளார்.

புக்கிட் அமான் சிறப்பு கிளை இயக்குநர் பதவியை தீர்மானிக்க உள்துறை அமைச்சரின் தலையீடு இருப்பதாக ஹாமிட் கூறியதாக மலேசியா கெஜட் செய்தித்தளம் மேற்கோளிட்டுள்ளது.

ஹம்ஸாவின் அரசியல் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹாமிட் விளக்கினார். இதனால், அமைச்சரின் நடவடிக்கைகளில் சிறப்பு கிளை அதிருப்தி அடைந்ததாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அமைச்சர் தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு கிளையை கட்டாயப்படுத்தியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

“ஒவ்வொரு சிறப்பு கிளையின் நடவடிக்கையும் இரகசியமானது, ஆனால் அதன் செயல்பாட்டு நோக்கம் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப இல்லை என்று சொல்வதற்கு இது போதுமானது,” என்று ஹாமிட் மேற்கோளிட்டுள்ளார்.

மூத்த காவல் துறை அதிகாரியின் நியமனம் குறித்து விவாதிக்கும் குரல்பதிவு உரையாடலில் இருப்பது தாம்தான் என ஹம்சா முன்பு ஒப்புக்கொண்டார்.

ஹாமிட் நேற்று காவல் துறை தலைவர பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டார்.