Home கலை உலகம் தனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது

தனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது

622
0
SHARE
Ad

சென்னை : தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகத் தயாராக இருக்கும் படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரையில் வெளியிடப்படுகிறது.

நெட்பிலிக்ஸ் தளத்தில் 17 மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து ஒரே நேரத்தில் வெளியிடும் வழக்கத்தை நெட்பிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

அதிக மொழிகளில் வெளியிடப்படும் முதல் தமிழ்ப் படமாக இதன் மூலம் ஜகமே தந்திரம் சாதனை புரிந்துள்ளது.

#TamilSchoolmychoice