Home உலகம் அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுலை நியமித்தார் ஒபாமா!

அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுலை நியமித்தார் ஒபாமா!

509
0
SHARE
Ad

Ralph Alswang Photographer www.ralphphoto.com 202-487-5025வாஷிங்டன், செப்டம்பர் 20 – இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக

வாஷிங்டன், செப்டம்பர் 20 – இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு சட்ட அமைப்பில் மூத்த ஆலோசகராக பணியாற்றி வந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா, கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2007–ம் ஆண்டு வரை அமெரிக்க பாதுகாப்பு துறையில் மூத்த ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் அவர், 1994-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, அமெரிக்க விமானப் படையிலும் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில், அமெரிக்க இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த நான்சி பாவெல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான புதிய தூதராக யாரையும் அமெரிக்கா நியமிக்காமல் இருந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.