கோலாலம்பூர்,ஜூலை 23 -உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 சம்பவத்தில், 298 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டதற்கு நீதிக் கேட்டு, கோலாலம்பூர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மலேசியர்கள் நேற்று ஒன்று கூடினர்.
அதன் படக்காட்சிகளை கீழே காணலாம்:-
“எம்எச் 17 பேரிடருக்கு நீதி வேண்டும்” என்ற பதாகயை கையில் ஏந்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்
(இன பேதமின்றி எம்எச்17 பேரிடருக்கு நீதி கேட்டு மலேசிய இளைஞர்கள்)
(நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மலேசிய கொடியை இளைஞர்கள் வழங்குகிறார்கள்)
(மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் இளைஞர்களுடன் கை குலுக்குகிறார்)
(“எம்எச்17 -க்கு நீதி” என்று எழுதப்பட்ட கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு, கையில் மலேசியா கொடி பொறிக்கப்பட்ட சின்னத்துடன் இளைஞர்கள் ..)
படங்கள்: EPA