Home இந்தியா இலங்கை போர் குற்றம்: ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு!

இலங்கை போர் குற்றம்: ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு!

619
0
SHARE
Ad

UN-Arms-Trade-Treaty_Hugh1ஜெனிவா, ஜூலை 23 – இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது.

தீர்மானத்தின் படி இலங்கையில் இறுதி போரின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை குழு ஒன்றை அமைத்தார்.

#TamilSchoolmychoice

அந்த குழுவுக்கு ஏற்கனவே இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவும் மறுத்து வருகிறது. தற்போது இந்தியாவும் அக்குழுவுக்கு  விசா வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

indiaவிசாரணை குழு இந்தியாவில் விசாரணை  நடத்துவதை தடுக்கும் வகையில் விசா மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய தெற்கு ஆசிய நாடுகள் மனித உரிமை ஆணைய விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.