ஜாகார்த்தா, ஜூலை 23 – இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மிக குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். ஆனால், தேர்தல் முறைகேடு நடந்திருக்கிறது இம்முடிவை ஏற்க முடியாது என அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் பிராபொவோ சுபியந்தோ கடுமையாக சாடினார். ஆயினும், நேற்று ஜோகோ விடோடோ வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
(அதிபர் ஜோகோ, துணை அதிபர் வேட்பாளர் ஜுசுப் கல்லாவுடன் வெற்றிப் பெற்ற களிப்பில் மக்களை நோக்கி கையசைக்கிறார்)
(சுண்ட கெலாப்பா எனும் துறைமுகத்தில் ஹாடி புனா செடியா எனும் படகில் இருந்து மக்கள் முன் உரையாற்றினார்)
(இந்தோனேசியா ஜனநாயக கட்சி தலைவராக ஜோகோ விடோடோ அதிபராக அதிகாரபூர்வமாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆவணம் மக்களிடம் காண்பிக்கப்படுகின்றது)
(ஜோகோ தனது மற்ற கட்சி உறுப்பினர்களுடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படம்)
(ஜோகோ மிக கம்பீரமாக இந்தோனேசியா பாரம்பரிய படகில் உரை நிகழ்த்துவதை பொது மக்கள் படம் எடுக்கும் காட்சி)
படங்கள்: EPA