Home உலகம் இந்தோனேசியா அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி!

இந்தோனேசியா அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி!

627
0
SHARE
Ad

Indonesian presidential candidate Joko "Jokowi" Widodo and his wife Iriana pose for pictures after casting their vote in Jakartaஜகார்த்தா, ஜூலை 9 – உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனேசியாவில் இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜகார்த்தா மாநில ஆளுநர் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ ஜெனரல் ப்ரபோவோ சுபியண்டோவை விட 6% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விடோடோ கூறுகையில், “இந்தோனேசிய மக்களுக்கும், காலை முதல் மாலை வரை கடுமையாக உழைத்த கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice