பெலோ ஹோரிசோண்டே (பிரேசில்), ஜூலை 9 – நேற்று பிரேசிலின் பெலோ ஹோரிசோண்டே நகரில் நடைபெற்ற பிரேசில் – ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண காற்பந்து அரையிறுதி போட்டியின்போது காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படக் காட்சிகள் இவை:-
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் உற்சாக மழையில் பிரேசில் இரசிகைகள் – உற்சாகம் நிலைக்கவில்லை என்பதுதான் சோகம்…
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் பிரேசில் இரசிகையின் மகிழ்ச்சி பொங்கும் காட்சி
ரியோ டி ஜெனிரோ நகரின் அழகிய கடற்கரைப் பகுதிகளில் தங்களைப் பீடித்த காற்பந்து மோகத்தைக் காட்டும் வண்ணம் விளையாடி மகிழும் பிரேசில் நாட்டு மங்கையர்
ஜூலை 8ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகரில் பொதுமக்களுக்காக திறந்த வெளி அரங்கில் காட்டப்பட்ட பிரேசில்-ஜெர்மனி ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்புக்கு முன்பாக, பிரேசிலின் தேசிய நடனமான சம்பா நடனம் இடம் பெறுகின்றது.
பிரேசிலுக்காக ஆதரவுக் கொடியை ஆர்வத்துடன் தூக்கிப் பிடிக்கும் பிரேசில் இரசிகை – ஆனால் தனது நாட்டு இரசிகர் கூட்டத்தை பிரேசில் ஒரேயடியாக ஏமாற்றி விட்டது என்பதுதான் சோகம்.
படங்கள்; EPA