Home கலை உலகம் 13–ம் தேதி கவிஞர் வைரமுத்துவிற்கு மணி விழா: அப்துல்கலாம் பங்கேற்கிறார்!

13–ம் தேதி கவிஞர் வைரமுத்துவிற்கு மணி விழா: அப்துல்கலாம் பங்கேற்கிறார்!

840
0
SHARE
Ad

vairamuthuகோவை, ஜூலை 9 – கவிஞர் வைரமுத்துவின் 60–வது பிறந்த நாள் விழா மற்றும் அவர் பத்மபூஷன் விருது பெற்றதுக்கான பாராட்டு விழா வருகிற 13–ஆம் தேதி வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கோவை, கொடிசியா அரங்கத்தில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழாவாக நடைபெற உள்ளது.

காலையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இதில் சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, மலேசியா இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் சரவணன் கலந்து கொள்கின்றனர்.

vairamuthu (1)கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு வைரமுத்துவின் மணிவிழா, பத்மபூஷன் விருது பெற்றதற்கு பாராட்டு விழா நடக்கிறது. இதைத் தொடர்ந்து வைரமுத்துவின் படைப்புகள் குறித்து உரையரங்கம் நடக்கிறது. அப்போது கவிஞர்கள் திருநாள் விருது கவிஞர் கல்யாண்ஜிக்கு வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

‘‘வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்’’ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. மாலை 7 மணிக்கு இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் வைரமுத்துவை பாராட்டி வாழ்த்துரை வழங்குகிறார்கள்.