Home இந்தியா ஆர்.கே.நகரில் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

570
0
SHARE
Ad

jeyalalithaசென்னை, ஜூன் 5- சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரே முதல்வராக இருக்க முடியும் என்பது இந்திய அரசியல் சட்ட விதி.

அவ்வகையில், முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த இடைத் தேர்தல் இம்மாதம் 27 -ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாள் சமூக ஆர்வலர்  ட்ராபிக் ராமசாமி உட்பட ஐந்து சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

#TamilSchoolmychoice

அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மனு தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா மனு தாக்கல் செய்ய வருவதால், மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் மேல் தளத்தில் இருந்த தேர்தல் அதிகாரி சவுரிராஜனின் அலுவலகம் திடீரென்று குளிர் சாதன வசதியுடன் கூடிய கீழ்த்தளத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும், அலுவலத்தின் உள்ளே செல்ல ஒருபுறம் சாய்வு தளமும், மறுபுறம் படிக்கட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு மட்டுமின்றி , ஜெயலலிதா வரும் வழிகளில் சாலைகள் சீர் செய்யப்பட்டு, வேகத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா நேரில் வருவாரா?

இதற்கிடையில், மனு தாக்கல் செய்ய வேட்பாளர்  நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் சார்பில் அவரது முகவர் மனு தாக்கல் செய்யலாம் என்றும், அவர்கள் மனுவை முன் மொழிந்தவர் உடன் வந்தால் போதும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, ஜெயலலிதா மனு தாக்கல் செய்ய நேரில் வராமல் அவரது முகவரை அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.