Home நாடு கலந்துரையாடல் நிகழ்ச்சி: மகாதீரை பேசவிடாமல் தடுத்த காவல்துறை!

கலந்துரையாடல் நிகழ்ச்சி: மகாதீரை பேசவிடாமல் தடுத்த காவல்துறை!

417
0
SHARE
Ad

TUN DR MAHATHIR MOHAMADகோலாலம்பூர், ஜூன் 5 – புத்ரா அனைத்துல வர்த்தக மையத்தில் இன்று காலை நடைபெற்று வரும் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை என்ற கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டுடன், பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு 1எம்டிபி விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்று காலை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் வெளியிட்ட தகவலில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நஜிப் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவித்தார்.

இந்நிலையில், அக்கூட்டத்தில் பார்வையாளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு நடுவே முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் பேச்சைத் துவங்கியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நிகழ்ச்சி சென்று கொண்டிருந்த நேரத்தில், நஜிப்புக்கு எதிராக மகாதீர் பேச்சைத் தொடங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால், கூட்டத்தில் இருந்து உயர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மேடைக்கு வந்து மகாதீரின் பேச்சைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.