கோலாலம்பூர், ஜூலை 9- அதிக புரத சத்து கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும்.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரத சத்து கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.
“உணவில் உயர்தர புரத சத்து சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரத சத்து அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .