Home இந்தியா 2ஜி வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு: தயாளு அம்மாள் மனு இன்று விசாரணை

2ஜி வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு: தயாளு அம்மாள் மனு இன்று விசாரணை

646
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 9- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்  தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Dayalu-Ammal_EPS2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 82) அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக உள்ளார். இந்த வழக்கு விசாரணை டெல்லியில் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க தயாளு அம்மாள்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிக்கை  பிறப்பிக்கப்பட்டது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் சார்பில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த மனுவை மே 31-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாளு அம்மாள் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில்  2 நீதிபதிகள் இந்த மனுவை விசாரிக்க மறுத்தனர். உச்சநீதிமன்றத்தையும்  நாடும்படியும் நீதிபதி அறிவுறுத்தினார்.

எனவே தயாளு அம்மாள் சார்பில், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிடக்கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறினார்.

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வக்கீல், உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த விலக்கு அளிக்கக்கோரிய மனு மீது (இன்று) விசாரணை நடைபெற உள்ளதை எடுத்துக்கூறி அவகாசம் கேட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, தயாளு அம்மாள் நேரில் ஆஜராவது தொடர்பான விசாரணையை  (இன்று) ஒத்திவைத்தார்.