Home இந்தியா கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

720
0
SHARE
Ad

08_dayalu_jpg_1511_1532285gசென்னை, மே 18 – முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்  உடல் நலக் குறைவால், சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதியின் இரண்டு மனைவியரில் மூத்தவரான தயாளு அம்மாள் மீது அண்மையில் 2ஜி அலைக்கற்றை-கலைஞர் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி இருவரின் தாயாரான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால்,  கடந்த சில மாதங்களாக அரசியல் காரணங்களால் பிரிந்திருந்த குடும்பத்தினர் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice