Home நாடு நரேந்திர மோடிக்கு நஜிப் வாழ்த்து

நரேந்திர மோடிக்கு நஜிப் வாழ்த்து

589
0
SHARE
Ad

Najib Razakகோலாலம்பூர், மே 18 – நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“2014 தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கும் பிஜேபி கட்சிக்கும் பாராட்டுகள். உங்களுடைய அரசாங்கத்தின் கீழ் வலுவான மலேசியா – இந்தியா பங்காளித்துவம் தொடருவதைக் காண விரும்புகிறோம்” என்று அவர் நேற்று தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தவர் நஜிப். மன்மோகன்-நஜிப் பேச்சு வார்த்தைகளின் பலனாக, பல வர்த்தக உடன்பாடுகள் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.