Home Featured தமிழ் நாடு திடீர் சுவாசக் கோளாறு: கருணாநிதி மனைவி தயாளு மருத்துவமனையில் அனுமதி!

திடீர் சுவாசக் கோளாறு: கருணாநிதி மனைவி தயாளு மருத்துவமனையில் அனுமதி!

587
0
SHARE
Ad

Dayalu Ammal -Karunanithiசென்னை- திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
83 வயதான தயாளு அம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அன்று இரவே அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தயாளு அம்மாளுக்கு ஏற்கெனவே சுவாசாக் கோளாறு இருப்பதாகவும், மேலும் சிறுநீரகப் பிரச்சினை தொடர்பிலும் அவர் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள தயாளு அம்மாளை அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தயாளு அம்மாள் உடல்நிலை தேறி வருவதாகவும், ஓரிரு நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.