இந்நிலையில், அவரின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. “கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகிறார். இல்லை..இல்லை எஸ்.ஜே சூர்யாவுடன் ஜனவரியில் படப்பிடிப்பிற்கு கிளம்புகிறார் விஜய்” என பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 10 இயக்குநர்களிடம் கதை கேட்ட அவர், இறுதியாக தன்னை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதனை முடிவு செய்துள்ளார்.
இதனை பரதனும் வாரப் பத்திரிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளார். வழக்கமாக விஜய் படம் பற்றிய அறிவிப்பினை அவரது ரசிகர்கள் தான் பெரிதும் கொண்டாடுவர். ஆனால், இந்த படம் பற்றிய அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு அதிக கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
தனது சினிமா வாழ்வில் பெரிய வெற்றிகளைக் கொடுத்துள்ள விஜய்க்கு மறக்க முடியாத தோல்விப் படங்களும் உண்டு. அந்த பட்டியலில் ‘அழகிய தமிழ் மகன்’ மறுக்க முடியாத படம். இது தான் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
விஜய்-பரதன் கூட்டணி இம்முறையாவது வெற்றி பெறுமா என்பது 2016-ல் தெரிய வரும்.