Home Featured நாடு தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளிக் கொண்டாட்ட விருந்து!

தேசிய மின்சார வாரியத்தின் தீபாவளிக் கொண்டாட்ட விருந்து!

1102
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய மின்சார வாரியம், (TNB) இன்று மதியம் கோலாலம்பூரிலுள்ள அதன் தலைமையக வளாகத்திலுள்ள மண்டபத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விருந்துபசரிப்பு ஒன்றை நடத்தியது.

Subra-TNB Deepavali Dinner-குத்து விளக்கேற்றி மின்சார வாரியத்தின் தீபாவளி விருந்துபசரிப்பைத் தொடக்கி வைத்த டாக்டர் சுப்ரா….பின்னால்  சக்திவேல் அழகப்பன் …

இந்த விருந்துபசரிப்பில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருடன் மின்சார வாரியத்தின் தலைவருமான டான்ஸ்ரீ லியோ மோகியும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

Subra-TNB Dinner-2தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனிச்சல் (கேக்) ஒன்றை வெட்டிய டாக்டர் சுப்ரா… அருகில் துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன், லியோ மோகி, சக்திவேல், மற்றும்  மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள்…

மஇகா தலைமைச் செயலாளரும், மின்சார வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவருமான சக்திவேல் அழகப்பனும், துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதனும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Subra-TNB Deepavali Dinner - 3

பிரதான விருந்து மேசையில் டாக்டர் சுப்ராவுடன் சக்திவேல், லியோ மோகி….

விருந்துபசரிப்பின் போது அனாதை ஆசிரமத்தைச் சேர்ந்த பல சிறுவயது பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விருந்துபசரிப்பில் பத்திரிக்கையாளர்களும், வாடிக்கையாளர்களும், மின்சார வாரியத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.