Home Featured உலகம் பிரான்ஸ் மீது ரசாயனத் தாக்குதல் – ஐஎஸ்ஐஎஸ் அடுத்த திட்டம்!

பிரான்ஸ் மீது ரசாயனத் தாக்குதல் – ஐஎஸ்ஐஎஸ் அடுத்த திட்டம்!

572
0
SHARE
Ad

franceபாரிஸ் – பிரான்சை முழுவதுமாக குறி வைத்துள்ள ஐஎஸ் இயக்கத்தினர் அங்கு அடுத்ததாக ரசாயன குண்டுகளை வீசி பேரழிவினை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நாட்டு பிரதமர் மேனுவேல் வால்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

பாரிசில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு பல்வேறு வகையிலும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பயணிகள் மற்றும் ஐரோப்பிய அகதிகளின் வருகை போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், “பிரான்ஸ் மீது ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நவீன ஆயுதங்களை வைத்துக் கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் ஐஎஸ் இயக்கத்தினரிடத்தில் உயிரியல் ஆயுதங்கள் கிடைத்துவிட்டால் அது உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.