Home நாடு சுக்மா சர்ச்சை : கற்பழிப்புப் புகாரில் சிக்கிய 3 விளையாட்டாளர்களும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

சுக்மா சர்ச்சை : கற்பழிப்புப் புகாரில் சிக்கிய 3 விளையாட்டாளர்களும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

676
0
SHARE
Ad

sukmaபெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – சுக்மா விளையாட்டுப் போட்டியில், கூட்டரசுப் பிரதேச கைப்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் விளையாட்டாளரை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த 3 விளையாட்டாளர்களும் (வயது  18 முதல் 19) இன்று அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 19 வயதுடைய பெண் கைப்பந்து விளையாட்டாளர் ஒருவர், தான் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, புத்ரா பல்கலைக்கழகத்திலுள்ள விளையாட்டாளர்கள் தங்கும் அறையில் வைத்து, சக விளையாட்டாளர்களால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து 3 விளையாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அச்சம்பவம் நடைபெறுவதற்கு முன், அப்பெண் தன் சக விளையாட்டாளர்களோடு மது அருந்த வெளியே சென்றதாகத் தெரியவந்திருக்கிறது. அந்த மது விருந்தில் விளையாட்டர்களோடு சேர்ந்து, கைப்பந்தாட்ட குழு பயிற்சியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice