Home நாடு சுக்மா: கற்பழிப்புப் புகாரில் சிக்கிய மூன்று விளையாட்டாளர்களும் விசாரணை கோரினர்!

சுக்மா: கற்பழிப்புப் புகாரில் சிக்கிய மூன்று விளையாட்டாளர்களும் விசாரணை கோரினர்!

584
0
SHARE
Ad

sukma logoபெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 –  சுக்மா விளையாட்டுப் போட்டியில், கடந்த வியாழக்கிழமை, கூட்டரசுப் பிரதேச கைப்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் விளையாட்டாளரை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த 3 விளையாட்டாளர்களும், இன்று தனித்தனியாக பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அடிப் அட்ஹா இஸ்மாயில் (வயது 18), மெகாட் பார்ஸெரில் பாயிஸ் மெகால் ரசாலி (வயது 19) மற்றும் முகமட் ஷாய்ஸாட் முகம ஷாபி (வயது 19) ஆகிய மூன்று விளையாட்டாளர்களும், கடந்த ஜூலை 4 ஆம் தேதி, அதிகாலை 4 மற்றும் 4.10 மணியளவில், புத்ரா பல்கலைக்கழகத்திலுள்ள ஓர் அறையில் வைத்து இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் மூவரையும் 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். இருப்பினும் அடிப் அட்ஹா இஸ்மாயில் மற்றும் மெகாட் பார்ஸெரில் ஆகிய இருவரும் மாதம் ஒருமுறை காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம்.