Home கலை உலகம் பாரதிராஜா படத்தில் நடித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை: கார்த்திகா

பாரதிராஜா படத்தில் நடித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை: கார்த்திகா

843
0
SHARE
Ad

ஜூலை 12- பாரதிராஜா படத்தில் நடித்த வேடத்தை ரசிகர்கள் ஏற்கவில்லை.

இனி அதுபோல நடிக்க மாட்டேன் என்றார் கார்த்திகா. இது பற்றி கார்த்திகா கூறியதாவது: அன்னக்கொடி பணீடத்தில் கிராமத்து பெண்ணாக வேடம் ஏற்றேன். இதற்கு முன் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்திருந்தேன்.

Karthika_Nair_Picture_2_hdabl_Indya101(dot)comபாரதிராஜா படத்துக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அன்னக்கொடி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கு காரணம் ரசிகர்கள் என்னை கிராமத்து கதாபாத்திரத்தில் ஏற்க விரும்பவில்லை.

#TamilSchoolmychoice

இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். தற்போது கன்னட படம் பிருந்தாவனா படத்தில்  நடித்து வருகிறேன்.

அயர்லாந்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அடிக்கடி மழை பெய்து படப்பிடிப்பை பாதித்தது. எப்போதெல்லாம் மழை நிற்கிறதோ உடனே படப்பிடிப்பு நடத்துவோம்.