Home உலகம் இலங்கை மாகாண சபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடக்கம்

இலங்கை மாகாண சபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் 25-ம் தேதி தொடக்கம்

498
0
SHARE
Ad

கொழும்பு, ஜூலை 12- இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில், போர் நடைபெற்ற வடக்கு மாகாணப் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையர் மகிந்த தேஷப்பிரியா இன்று அறிவித்துள்ளார்.

sri-langkaவடக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 1ம்தேதி வரை மனுக்கள் பெறப்படும். முன்பண  தொகை வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. செப்டம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை தமிழ் மக்களுடன் சமரசம் செய்துகொள்ளும்படி இலங்கை அரசை வலியுறுத்தி வந்த சர்வதேச நாடுகள் வடக்கு மாகாண தேர்தலை எதிர்பார்த்துள்ளன.

#TamilSchoolmychoice

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதல் முறையாக 1988ல் தேர்தல் நடந்தது. அப்போது விடுதலைப் புலிகள் தனி தமிழ் ஈழத்தை அமைத்திருந்ததால், ஒரே ஒரு கட்சி மட்டுமே தேர்தலில் பங்கேற்றது. அதன்பின்னர் நீதிமன்ற  உத்தரவையடுத்து 2006ல் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

2008ல் கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் 2009ல் போர் முடிவுக்கு வந்ததையடுத்து மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு இப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.

மாகாணங்களின் அதிகாரத்தை நீர்த்துப் போக வைக்க அரசு முயற்சிப்பதால் தேர்தல் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை இந்தியா வரவேற்றுள்ளது. அதேசமயம், மாகாண சபைகளின் அதிகாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.