Home இந்தியா இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து

இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து

587
0
SHARE
Ad

அகமதாபாத், ஜூலை 12- இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

தனது வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் மோடி தெரிவித்துக்கொண்டார். அதில், ‘ ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை கொண்டு வரட்டும்.‘, என்று அவர் கூறியிருந்தார்.

M_Id_380073_Narendra_Modiகுஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரங்கள் காரணமாக தன் மீது படிந்துள்ள கறைகளை, சுத்தம் செய்ய மோடிபோராடி வருகிறார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மோடி, 2014-ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய மக்களிடம் நன்மதிப்பை பெறும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கு பதில் அளிக்கும் விதமாக குஜராத் காங்கிரசின் தலைவர் அருண் மோத்வாடியா கூறியதாவது:-

வாக்குகளைப்பெற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் ராமர் கோவில் பிரச்சினையை கையிலெடுப்பார்கள். பின்னர் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்றவர் என்று அவர்கள் கூறுவார்கள். சச்சார் கமிட்டி அறிக்கையை எரிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறுவார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.