Home நாடு கோல பெசுட் இடைத்தேர்தல்: அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் – தேர்தல் ஆணையம்

கோல பெசுட் இடைத்தேர்தல்: அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் – தேர்தல் ஆணையம்

557
0
SHARE
Ad

amaran-shahidan-kassim-ngo-persatuan-parti-parlimenகோலாலம்பூர், ஜூலை 12 – பாதுகாப்பு காரணங்களுக்காக கோல பெசுட் இடைதேர்தலில் பயன்படுத்தப் போகும் அழியா மையின் விநியோகிப்பாளர் பற்றிய தகவலை வெளியிடப்போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அழியா மையின் நிறம் கூட, இடைத்தேர்தல் அன்று தான் தெரியவரும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன் காஸிம் தெரிவித்துள்ளார்.

“அழியா மை குறித்த தகவலை நாங்கள் வெளியிட்டால், தவறு செய்யும் சில வாக்காளர்கள் அந்த மையை வாங்கி, தங்கள் விரலை அதில் நனைத்துக்கொள்வார்கள். பிறகு வாக்களிக்கும் மையங்களுக்கு சென்று, வாக்குச்சீட்டுக்களை வாங்க வரிசையில் நிற்பார்கள்.அதிகாரிகள் கேட்டால் என் விரலில் தான் மை உள்ளதே என்று காட்டுவார்கள்” என்று ஷாஹிடன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில், அழியா மை அழிந்தது தொடர்பாக இதுவரை 1,469 புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வந்துள்ளன என்று குறிப்பிட்ட ஷாஹிடன், அவர்கள் ஒருசில இரசாயனங்களைக் கொண்டு அந்த மையை தங்கள் விரலிலிருந்து அழித்திருக்கக் கூடும் என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறியுள்ளார்.