Home உலகம் ‘மலேசிய மெவெரிக்’ நூலாசிரியர் பேரி வேய்ன் காலமானார்

‘மலேசிய மெவெரிக்’ நூலாசிரியர் பேரி வேய்ன் காலமானார்

717
0
SHARE
Ad

Barry-Wain-Sliderபிப்.5-  ‘மலேசிய மெவெரிக்-மகாதீரின் கொந்தளிப்பான காலகட்டங்கள்” (‘ Malaysian Maverick: Mahathir Mohamad in Turbulent Times) என்ற நூலின் ஆசிரியர் பேரி வேய்ன் இன்று காலை சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார்.

அவரது இறப்பை முன்னிட்டு ‘ஆசியா செந்தினல்’ பத்திரிக்கை, ஆசியாவில் நாற்பது ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் நீடித்த சிறந்த வெளிநாட்டு நிருபராக 69  வயதான பேரி வேய்னைக் குறிப்பிட்டது.

பேரி வேய்ன், ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ப்ரிஸ்பேன் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், ஹாங்காங் செல்லுவதற்கு முன் உள்ளூர் நாளிதழ் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்தார். அதன் பிறகு, ஃபார் ஈஸ்டெர்ன் எகொனொமிக் ரிவியுவில் (Far Eastern Economic Review) வேலை செய்தார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையில் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர் மற்றும் பாங்காக் பத்திரிக்கை நிருபராக பணியாற்றினார்.

இங்கிருந்த நேரங்களின் போது, வியாட்நாம் அகதிகளைப் பற்றிய நூல் எழுதினார். அதன் பிறகு ஹாங் காங் சென்று பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றியதோடு கட்டுரையாளராகவும் பணி புரிந்தார்.

கடந்த சில வருடங்களாக சிங்கப்பூரில் உள்ள தென் கிழக்காசியா ஆய்வு மையத்தில் கல்வியாளராக பணியாற்றினார்.

ஒரு பத்திரிக்கை நிருபராக, பேரி வெய்ன் சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகராகிய டாக்டர் மகாதிர் குறித்து நிறைய ஆய்வுகளைச் செய்துள்ளார்.