Home நாடு “வழக்குகளின் தீர்ப்பை முன்கூட்டி நிர்ணயிக்கும்” – ஒளிநாடா வெளியிட்டார் குவா பர்ன்

“வழக்குகளின் தீர்ப்பை முன்கூட்டி நிர்ணயிக்கும்” – ஒளிநாடா வெளியிட்டார் குவா பர்ன்

646
0
SHARE
Ad

Gwo-Burne-Low-Sliderபிப்ரவரி 5 – கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லொ குவா பெர்ன் 2007-ஆம் ஆண்டு வி.கே லிங்கம் ஒளிநாடாவை வெளியிட்டு பிரபலமானார். அதன் காரணமாக கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக பிகேஆர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று வெற்றியும் கண்டார்.

மேலும் மலேசியாவில் நீதித் துறையில் ஊழல் நிகழ்வதை அந்த ஒளிநாடா மூலம் சுட்டிக் காட்டினார்.

தற்போது நீதித் துறை ஊழலை அம்பலப்படுத்தும் மற்றொரு புதிய ஒளிநாடாவை குவா பர்ன் வெளியிட்டுள்ளார். அந்த ஒளிநாடாவில், சில ஆண்டுகளுக்கு முன்பு, கணக்காளர் ஒருவர் சிவில் வழக்குத் தொடர்பான  கூட்டத்தில் விவாதித்துக் கொண்டிருப்பது குவா பர்ன் தந்தை முய் ஃபா  பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் பதிவு செய்துள்ள உரையாடலில்  “W” மற்றும் ” J” என்ற பெயர் கொண்ட நீதிபதிகள் தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம், நீதித் துறையின் மற்றொரு ஊழல் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஒளிநாடா சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்டது என்றும் குவா பர்ன் கூறியுள்ளார்.

சீனப் பெருநாளுக்குப் பின்னர் தணிக்கை செய்யப்படாத இந்த முழுமையான ஒளிநாடா வெளியிடப்படும் என்றும் குவா பர்ன் தெரிவித்தார்.

-மலேசியா கினி