Home இந்தியா ஈரான் சிறையில் கொடுமை: உணவு, தண்ணீர் தரவில்லை; கழிவறையை சுத்தம் செய்தோம்

ஈரான் சிறையில் கொடுமை: உணவு, தண்ணீர் தரவில்லை; கழிவறையை சுத்தம் செய்தோம்

721
0
SHARE
Ad

Iran-Map-Sliderநாகர்கோவில்,பிப்.6-  “ஈரான் சிறையில் உணவு தண்ணீரின்றி கஷ்டப்பட்டோம், கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தினர்” என்று குமரி மாவட்டம் திரும்பிய மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கத்தாரில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் ஆரோக்கியபுரம், கடியப்பட்டணம், குளச்சல், சைமன்காலனி, இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, பூத்துறை, காரைக்கால் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் 10ம் தேதி கத்தாரில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற படகு இயற்கை சீற்றத்தால் வழிதவறி ஈரான் நாட்டு கடற்படையிடம் சிக்கியது. அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மத்திய அரசின் முயற்சி காரணமாக இம்மீனவர்களின் முதலாளிகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினர். இதனையடுத்து, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இக்கிஷ் தீவில் தங்க வைக்கப்பட்டனர்.

மத்திய அரசு மீண்டும் தலையிட்டதன்பேரில், 29 பேரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் அனைவரும் அபுதாபி அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து குமரி மாவட்ட மீனவர்கள் 26 பேரும் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தனர்.

ஈரான் ஜெயிலில் இருந்து மீண்டு வந்த குளச்சல் மீனவர் அமல்ராஜ் கூறியதாவது: சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டோம். சரியான உணவு, தண்ணீர் வழங்கவில்லை. மாற்று உடை கூட வழங்கவில்லை. சைனீஸ் உணவு வகைகளை வழங்கினர். ஜெயிலில் உள்ள கழிப்பறை, செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்ய வைத்தனர். ஜெயிலில் வேலை செய்து கிடைத்த பணத்தை கொண்டு செலவு செய்தோம். மீண்டும் வந்தது மறுபிறவி எடுத்தது போன்று உள்ளது. எங்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க உதவிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.