Home கலை உலகம் “கடல்’ படத்திற்கு தடை ஐகோர்ட்டில் மனு

“கடல்’ படத்திற்கு தடை ஐகோர்ட்டில் மனு

605
0
SHARE
Ad

indexசென்னை,பிப்.6-நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள,கடல் படத்திற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர்  தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுவதும் கடல் என்கின்ற படம், திரையிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் டாக்கிஸ் என்றநிறுவனம் தயாரித்துள்ளது.இதற்கு, யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள், கிறிஸ்தவ மதத்தை, சமூகத்தை, அவதூறு செய்வதாக உள்ளது.இதனால், கிறிஸ்தவர்கள் மனம் புண்படுகிறது.
கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி, தவறாக எண்ணம் உருவாகும் வரையில் இப்படம் உள்ளது. ஒரு காட்சியில் இயேசு கிறிஸ்து சிலை உடைந்துஇருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.இதற்கு யு சான்றிதழ் வழங்கி இருக்கக்கூடாது.
எனவே, கடல் படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சென்சார் சான்றிதழை ரத்து செய்யவேண்டும். படத்தை  தியேட்டர்களில் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது.