Home நாடு பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன் கலந்துரையாடல்

பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன் கலந்துரையாடல்

819
0
SHARE
Ad

 Zamry-Sliderஈப்போ, பிப்.5- பேராக் மாநிலத்திள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கென மாநில அரசு வழங்கியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேராக் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி (படம்) அறிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பேரா மாநிலத்தில் உல்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பேராக் மாநில அரசு 2,000 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

தொடர்ந்து, இந்நிலத்தை சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய தகுந்த அமைப்புகள் இல்லாததால் இந்நிலத்தை சீரமைத்து மேம்படுத்த தகுதியான அமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ ஸம்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், தோட்ட நிர்வாகத்தில் நல்ல அனுபவமும் திறமையும் கொண்ட சங்கமாகத் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்  அமைந்துள்ளதால் 2,000 ஏக்கர் நிலத்தினைச் சிறந்த முறையில் மேம்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அது உதவ முடியும் என அவர் தெரிவித்தார்.

சுமுகமான முறையில்  இப்பேச்சுவார்த்தை நடந்தால் 2,000 ஏக்கர் நில மேம்பாட்டு திட்ட்த்தை நிர்வாகிக்கும் பொறுப்பு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திடம் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ ஸம்ரி குறிப்பிட்டார்.