Home நாடு அன்வார் இப்ராகிமுடன் பொது கலந்துரையாடல்

அன்வார் இப்ராகிமுடன் பொது கலந்துரையாடல்

719
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர். பிப்.6-  பொது தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதனை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் விளக்கம் கோரி விவாத மேடையொன்றை செம்பருத்தி. கோம். இணையதளம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வழக்கறிஞர் க.ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்த விவாத மேடையில் முதன்மையாக விளங்கும் நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்கள் மூன்று கேள்விகளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் கேட்பார்கள்.

இதனைத் தொடர்ந்து, பத்து சமுக இயக்கங்களின் பிரதிநிதிகளும் கேள்விகள் தொடுப்பார்கள்.

#TamilSchoolmychoice

எந்த விதமான கேள்விகளையும் சுதந்திரமாக மலாய், ஆங்கிலம், மற்றும் தமிழ் மொழியில் கேட்கலாம். பார்வையாளர்களின் கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு பதிலளிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இச்சிறப்பு நிகழ்வானது எதிர்வரும் 14.2.2013 வியாழக்கிழமை மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

2500 பேர் இலவசமாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் சிலங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், முக்கிய மக்கள் கூட்டணித் தலைவர்கள், பொது மக்கள் என எதிர்பார்ப்பதாக  வழக்கறிஞர் ஆறுமுகம் கூறினார்.

மேல் விவரங்களுக்கு, சேகரன் 016-2510752 மற்றும் செம்பருத்தி 02-26980622.