Home உலகம் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் : மியான்மர் ஜனாதிபதி அறிவிப்பு

அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் : மியான்மர் ஜனாதிபதி அறிவிப்பு

573
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 16- மியான்மரில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சுமார் 200 பேர் ரோஹிங்யா கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Burma_2355686b

மியான்மர் ஜனாதிபதி தெய்ன் செய்ன் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை நேற்று அவர் சந்தித்து பேசினார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தெய்ன் செய்ன், ‘இந்த ஆண்டின் இறுதிக்குள் மியான்மர் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். அரசியல் கைதிகளாக யாரும் சிறையில் இருக்க மாட்டார்கள்’ என்று அறிவித்தார்.