Home இந்தியா இந்தியாவில் வழங்கப்படும் காசநோய் மருந்துகள் போலி : ஆய்வில் ‘திடுக்’ தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் காசநோய் மருந்துகள் போலி : ஆய்வில் ‘திடுக்’ தகவல்

673
0
SHARE
Ad

indexசென்னை,பிப்.6- இந்தியாவில் காச நோய்க்காக வழங்கப்படும் மருந்துகள் போலி என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
‘டியூபர்குளோசிஸ்’ என்ற கிருமியால் காசநோய் ஏற்படுகிறது. காசநோய் கண்டவர்கள் சளி, இருமல், உடல் இளைப்பு, எலும்புகளில் பலமின்மை போன்ற பாதிப்புகளால்  மிகவும் சிரமப்படுவார்கள். இந்நிலையில் உலகமெங்கும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் காசநோய்க்காக வழங்கப்படும் மருந்துகள் போலி என்று  தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட முன்னேறிய, முன்னேறி வரும் நாடுகளில் காசநோயின் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. அதே நேரம் இந்த நோய்க்காக வழங்கப்படும்  மருந்துகள் போலியானவை. 17 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட 19 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 713 மாதிரிகளில் நடந்த சோதனையில் காசநோய்க்காக வழங்கப்பட்ட மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு தேர்வில் தோல்வியடைந்தன. அந்த மருந்துகள் காசநோய்க்கான தரமான மருந்துகள் இல்லை என்று ஆய்வில்  தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் நோயாளிகளுக்கு மருந்துகளை பயன்படுத்தியபோது அவை வேலை செய்யவில்லை. சிகிச்சையில் தோல்வி ஏற்பட்டது. காசநோய்க்காக வழங்கப்பட்ட அந்த மருந்துகள் கிருமிகளை கொல்லவில்லை. மாறாக உடலில் சேர்ந்த சிறிது நேரத்தில் நீர்த்துப்போனது. சீனாவில் பெய்ஜிங், ரஷ்யாவில் மாஸ்கோ இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் வழங்கப்பட்ட மருந்துகள் யாவும் போலியானவை. உலகில்  மொத்தம் 9 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எடுத்துக் கொள்ளும் மருந்து போலியானதே. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.