Home கலை உலகம் விஸ்வரூபம் நாளை ரிலீஸ்

விஸ்வரூபம் நாளை ரிலீஸ்

558
0
SHARE
Ad

kamal-haasan_350_013113112602சென்னை,பிப்.6-சர்ச்சைகளில் சிக்கிய கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தமிழகத்தில் நாளை ரிலீசாகிறது. கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக புகார் மனுவை அளித்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி படத்துக்கு 2 வாரத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. கடந்த மாதம் 25ம் தேதி படம் ரிலீசாக இருந்தபோதுதான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தடை உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் படத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல்ஹாசன் பேச வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. படத்தில் 7 காட்சிகளும் சில வசனங்களின் ஒலியை நீக்கவும் கமல் ஒப்புக்கொண்டார். சமரசம் ஏற்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு முடிக்கப்பட்டது. இப்போது விஸ்வரூபம் படம் தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் நாளை திரைக்கு வருகிறது.