Home இந்தியா புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை

541
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_87975275517சென்னை,பிப்.6- புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம் தலைமைசெயலகத்தை, அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மத்திய சுற்றுச் சூழல்துறையின் அனுமதி பெறாமல் புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை நாளையும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற உள்ளது.
சென்னை புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை செயல்பட உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றமும் மறுத்திருந்தது. தடை அகன்றதால் தலைமை செயலகத்தில் தற்போது மருத்துவமனை செயல்பட துவங்கியுள்ளது. பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள இத்தடையால் மருத்துவமனை செயல்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.