Home அரசியல் ம.இ.கா மத்திய செயலவையிலிருந்து வேள்பாரி நீக்கம்? டத்தோ சோதிநாதன், சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் புதிய நியமனம்?

ம.இ.கா மத்திய செயலவையிலிருந்து வேள்பாரி நீக்கம்? டத்தோ சோதிநாதன், சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் புதிய நியமனம்?

476
0
SHARE
Ad

MIC-Logo-Sliderஜூலை 17 – தேசியத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மற்றொரு அதிர்ச்சி அதிரடியாக முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரியை மத்திய செயலவை உறுப்பினர் நியமன பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அவருக்கு பதிலாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகன் சுந்தர் சுப்ரமணியத்தை பழனிவேல் மத்திய செயலவை உறுப்பினராக நியமித்திருக்கின்றார்.

மற்றொரு நியமன உறுப்பினரான உஷா நந்தினிக்கு பதிலாக கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதனை மத்திய செயலவை உறுப்பினராக பழனிவேல் நியமித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இந்த நியமனங்கள் கட்சியில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.