Home நாடு பத்துகாஜாவில் தடுப்புக் காவலில் 26 வயது ஆடவர் மரணம்- உடலில் காயங்கள் இருப்பதாக தந்தை புகார்

பத்துகாஜாவில் தடுப்புக் காவலில் 26 வயது ஆடவர் மரணம்- உடலில் காயங்கள் இருப்பதாக தந்தை புகார்

527
0
SHARE
Ad

lock-up-deaths-400கோலாலம்பூர், ஜூலை 17 –  பத்து காஜாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 வயது ஆடவர் ஒருவர் நேற்றிரவு மரணமடைந்தார்.

தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் மரணமடைவது குறித்த விவகாரம், தர்மேந்திரன் மரணத்திற்குப் பிறகு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. நாடெங்கிலும் தர்மேந்திரன் மரணம் பேசப்பட்டு, காவல்துறையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அரசாங்கமும் தர்மேந்திரன் மரணத்தை கொலை என்று வகைப்படுத்தி,அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை குற்றம் சாட்டியது.

#TamilSchoolmychoice

மக்களும், அரசாங்கமும் விழித்துக் கொண்டன. இனி தர்மேந்திரன் தான் தடுப்புக் காவலில் இறந்த கடைசி மலேசியராக இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொறியியலாளர் கருணாநிதி த/பெ பழனிவேல் (வயது 42) கடந்த ஜூன் 1 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலிலும் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.

இந்நிலையில், நேற்று தடுப்புக்காவலில் இறந்த ஆடவரின் தந்தையான சியூ பா, இன்று காலை 8.30 மணியளவில், மகனின் உடலை அடையாளம் காண மருத்துவமனைக்கு சென்றார்.

அடையாளம் காணும் போது தனது மகனின் உடலில், காதிலும் தோள்பட்டையிலும், தொடையிலும் காயங்கள் இருந்ததைக் கண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.