Home நாடு சிறையில் மேலும் ஒருவர் மரணம்!

சிறையில் மேலும் ஒருவர் மரணம்!

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது ஆடவர் ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு குலுவாங் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிறை அதிகாரிகள் தாக்கல் செய்த காவல் துறை அறிக்கையை மேற்கோள் காட்டிய எப்எம்டியின் அறிக்கைபடி, மருத்துவமனையில் சுரேந்திரன் ஷங்கர் இறந்துவிட்டதாக கூறுகிறது.

சுரேந்திரனின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் தவறு ஏற்பட்டிருப்பது குறித்து சந்தேகிப்பதாக அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“அவர் மரணமுற்றதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் இங்கே அநீதி இருப்பதாக நான் உணர்கிறேன்,” என்று சுரேந்திரனின் தாயார் குமுதமேரி ஆசிர்வதம் கூறி உள்ளார்.

“சுரேந்திரனுக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதால் இது தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நாங்கள் உணர்கிறோம். அவருக்கு வயது 21 தான், ” என்று அவர் மேலும் கூறினார்.

2020 ஜூன் மாதம் சுரேந்திரன் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டு, குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்னர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 25- ஆம் தேதி சிம்பாங் ரெங்காம் சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் முவார் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் சிம்பாங் ரெங்காம் சிறை அதிகாரிகளால் தொடர்பு கொண்டதாக குமுதமேரி மேற்கோளிட்டுள்ளார். சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை குலுவாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வயிற்றில் கடுமையான வலி இருப்பதாக புகார் எழுந்தது.

சுரேந்திரனின் நிலை பின்னர் மோசமடைந்தது, நேற்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இறந்துவிட்டதாக கூறியதாக கூறப்படுகிறது.