Home அரசியல் மத்திய செயற்குழுவில் மாற்றம்: தனிப்பட்ட நோக்கங்கள் இருக்குமானால் கேள்வி எழுப்பப்படும் – டாக்டர் சுப்ரா

மத்திய செயற்குழுவில் மாற்றம்: தனிப்பட்ட நோக்கங்கள் இருக்குமானால் கேள்வி எழுப்பப்படும் – டாக்டர் சுப்ரா

607
0
SHARE
Ad

SUBRA

கோலாலம்பூர், ஜூலை 18 – ம.இ.கா வின் மத்திய செயற் குழுவில் இருந்து இரண்டு உறுப்பினர்களை நீக்கியதற்கு சில தனிப்பட்ட நோக்கங்கள் இருக்குமானால் அது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று அக்கட்சியின் துணைத்தலைவரான டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்ரா, “கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இது செய்யப்பட்டிருந்தால் நல்லது. ஆனால் இந்த மாற்றங்களுக்கு கேள்வி எழுப்பும் படியான சில நோக்கங்கள் இருக்குமானால், அது குறித்து நாங்கள் ஆராய வேண்டிவரும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால் ‘கேள்வி எழுப்பும் படியாக’ என்றால் எந்த மாதிரியான காரணங்களாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்த  சுப்ரா, “யார் இதை செய்தார்களோ அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், கட்சியின் மத்திய செயற்குழுவில் யாரை நியமிப்பது என்று கட்சியின் தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு என்பதையும் சுப்ரா  சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற் குழுவில் மாற்றங்கள் நிகழ்வது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பழனிவேல், ம.இ.கா வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரியை மத்திய செயலவை உறுப்பினர் நியமன பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகன் சுந்தர் சுப்ரமணியத்தையும், மற்றொரு நியமன உறுப்பினரான உஷா நந்தினிக்கு பதிலாக கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதனையும் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.