Home அரசியல் ம.இ.கா தலைமைத்துவ தேர்தல்: கூட்டரசுப் பிரதேச கிளைத் தலைவர்களைச் சந்திக்கிறார் சுப்ரா! கோல சிலாங்கூர் கிளைத்...

ம.இ.கா தலைமைத்துவ தேர்தல்: கூட்டரசுப் பிரதேச கிளைத் தலைவர்களைச் சந்திக்கிறார் சுப்ரா! கோல சிலாங்கூர் கிளைத் தலைவர்களைரைச் சந்திக்கிறார் பழனி!

488
0
SHARE
Ad

subra-and-palani

கோலாலம்பூர், ஜூலை 18 – ம.இ.கா தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் பழனிவேலுக்கு எதிராகப் போட்டியிடுவது தொடர்பாக, அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இன்று மாலை கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபல விடுதியில், கூட்டரசுப் பிரதேச ம.இ.கா கிளைத் தலைவர்களை சந்திக்கின்றார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, டாக்டர் சுப்ரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா? இல்லையா ? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று ம.இ.காவின் முக்கிய பிரமுகர்கள் கூறுகின்றனர். அதோடு டத்தோ சரவணனும் தான் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சுப்பிரமணியம் இதற்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், தக்க தருணம் வரும்பொழுது தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்தார். அதன்படி, தற்போது கிளைத் தலைவர்களைச் சந்தித்து இது குறித்து விவாதிக்கிறார் என்று ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

நேற்று ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல், மத்திய செயற்குழுவில் இருந்து வேள்பாரியை நீக்கி அதிரடி மாற்றங்கள் செய்த அடுத்த நாளே இப்படி ஒரு சந்திப்பு நிகழ்வது ம.இ.கா வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

பழனிவேல் கோல சிலாங்கூர் செல்கிறார்!

இதற்கிடையே, பழனிவேல் கோல சிலாங்கூர் தொகுதி ம.இ.கா கிளைத் தலைவர்களைச் சந்திக்க இன்று மாலை கோல சிலாங்கூர் செல்கிறார். கட்சியில் தனது தலைமைத்துவத்தின் அடுத்த 3 வருடங்களுக்கான இலக்குகள் குறித்து பழனி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழனிவேல் ஒவ்வொரு தொகுதியாக  சென்று அந்தந்த கிளைத் தலைவர்களை மட்டும் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் எந்த ஒரு குழுவும் இன்றி தான் மட்டும் தனியாகவே சந்திக்கிறார். பழனிவேலின் இந்த சந்திப்பு, கட்சியின் தலைவர் பதவி குறித்து விவாதிப்பதற்காக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

பழனிவேல் தனது தலைமைத்துவத்தின் கீழ் யாரையும் அணி சேர்க்கவில்லை. அவர் கட்சி தேர்தலை எல்லோருக்கும் பொதுவானதாகவே, அணிகள் ஏதுமின்றி  நடத்த விரும்புகிறார் என்று அவரின் நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.